வலுவான எதிர்க்கட்சியால் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியம்: நடிகர் ரஜினி
ADDED : 519 days ago
டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (ஜூன் 09) இரவு 7:15 மணிக்கு பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினி சென்னையில் இருந்து டில்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஜவஹர்லால் நேருக்கு பிறகு 3வது முறையாக, பிரதமராக மோடி பதவியேற்பது மகத்தான சாதனை. லோக்சபா தேர்தலில், மக்கள் வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்துள்ளனர். வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்தது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான அறிகுறி. விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெற்றதற்கு திருமாவளவன், சீமானுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு ரஜினி கூறினார்.