'காஞ்சனா 4' விரைவில் அறிவிப்பு - ராகவா லாரன்ஸ்
ADDED : 503 days ago
ராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில் 'காஞ்சனா 4' படம் ஆரம்பமாக உள்ளது என கடந்த சில நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. அதோடு படத்தின் நாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்கிறார் என்றும் சொன்னார்கள்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் அவரது எக்ஸ் பக்கத்தில், “காஞ்சனா' படத்தின் நடிகர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் சுற்றி வரும் தகவல்கள் எல்லாம் வெறும் வதந்திதான். ராகவேந்திரா புரொடக்ஷன் சார்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்,” என்று தெரிவித்துள்ளார்.
'காஞ்சனா' படத்தின் முந்தைய பாகங்கள் குடும்பத்தினர் கொண்டாடிய படங்களாகவே இருந்தன. அதனால் வசூல் ரீதியாகவும் லாபத்தைக் கொடுத்தன. சமீபத்தில் 'அரண்மனை 4' படமும் வெற்றி பெற்றதால் 'காஞ்சனா 4' படத்தை உருவாக்குகிறார்கள் என கோலிவுட்டில் தெரிவித்தார்கள்.