'எதிர்நீச்சல்' திருச்செல்வம் மகள் திருமணம்
ADDED : 728 days ago
எதிர்நீச்சல் தொடர் முடிந்த கையோடு மகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார் இயக்குனர் திருச்செல்வம். இவரின் மகள் பிரியவர்ஷினி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைனிங் பட்டப்படிப்பு முடித்து டிசைனராக பணியாற்றி வருகிறார். பிரியவர்ஷினி திருமணம் சென்னையில் எளிய முறையில் நடந்துள்ளது.
இந்த திருமண நிகழ்வில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கின்றனர். 'எதிர்நீச்சல்' குடும்பமும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளப் பக்கங்களில் பரவி வருகின்றன.