சினிமாவில் களமிறங்கும் அடுத்த வாரிசு
ADDED : 490 days ago
சமூக வலைத்தளங்களில் கவனம் செலுத்துகிறவர்களுக்கு ஹசேல் ஷைனியை தெரியும். அவர் பிரபு சாலமனின் மகள். சமூக வலைத்தளங்களில் நிறைய பாலோயர்ஸ் வைத்திருப்பவர். அவர்கள் எப்போது சினிமாவில் நடிக்க போகிறீர்கள் என்று கேட்டு வந்தார்கள். இப்போது அது நடக்கப் போகிறது.
தன் மகள் அறிமுகமாகும் படத்தை இயக்கப் போகிறார் பிரபு சாலமன். இதில் ஷைனிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறவர் வனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீஹரி. படத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கி விட்டது. காட்டுக்குள் நடக்கும் காதல் கதையாக உருவாகிறதாம். தற்போது ஷைனிக்கும், ஸ்ரீஹரிக்கும் பிரபு சாலமன் அலுவலகத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.