ஆந்திர அமைச்சராகப் பதவியேற்ற பவன் கல்யாண்
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண். நடந்து முடிந்து ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் அவரது ஜனசேனா கட்சி சார்பாகப் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றாலும் கூட்டணி கட்சிகளான பாஜக, ஜனசேனா கட்சி ஆகியவற்றுடன் மந்திரி சபையை அமைக்க முடிவு செய்தார்.
அதன்படி இன்று காலை சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பதவியேற்றார். அவருக்கடுத்து பவன் கல்யாண் அமைச்சராகப் பதவியேற்றார். தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் பதவியேற்றனர்.
பதவியேற்று முடிந்த பின் பிரதமர் மோடி, முதல்வர் சந்திரபாபு நாயுடு, மற்றும் மேடை அருகில் அமர்ந்திருந்த மற்ற மத்திய அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் ஆகியோருக்கு வணக்கம் தெரிவித்து வாழ்த்துகளைப் பெற்றார் பவன் கல்யாண். அண்ணன் சிரஞ்சீவி காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கினார்.
நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதாவுடன் கலந்து கொண்டார்.