பிரபாஸ் திருமணம் செய்யாதது ஏன் - ராஜமவுலி பதில்
ADDED : 565 days ago
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். ராஜமவுலி இயக்கிய பாகுபலி 1 மற்றும் 2 படங்கள் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார். தற்போது தொடர்ச்சியாக பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார். நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி என்ற பிரமாண்ட சியின்ஸ் பிக்ஷன் படத்தில் நடித்துள்ளார். வரும் ஜூன் 27ல் இந்த படம் ரிலீஸாகிறது.
44 வயதை கடந்தும் பிரபாஸ் இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார். இதுபற்றி இயக்குனர் ராஜமவுலி கூறுகையில், ‛‛பிரபாஸ் சோம்பேறி. திருமணம் செய்வதிலும் அப்படியே இருக்கிறார். ஒரு பெண்ணை கண்டுபிடித்து அதுபற்றி அவரின் பெற்றோரிடம் பேசுவதையும் அவருக்கு அதிக வேலையாக தெரிகிறது. அதனால் தான் திருமணம் செய்யாமல் உள்ளார் என நினைக்கிறேன்'' என்றார்.