உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஈஷா யோகா மையம் வந்து சென்ற எம்.பி., கங்கனா

ஈஷா யோகா மையம் வந்து சென்ற எம்.பி., கங்கனா

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகியை, பா.ஜ.,- எம்.பி., கங்கனா ரணாவத் நேற்று, தரிசனம் செய்தார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மாண்டி தொகுதியில், பிரபல நடிகையான கங்கனா ரணாவத் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வென்றார்.

கடந்த, 9ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற கங்கனா, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்துக்கு அன்று இரவே வந்தார். ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவை சந்தித்து ஆசி பெற்றார். மூன்று நாட்கள் ஈஷா யோகா மையத்தில் தங்கியிருந்து லிங்க பைரவி, தியான லிங்கம், ஆதியோகியை தரிசனம் செய்தார். நேற்று, ஈஷா யோகா மையத்தில் இருந்து புறப்பட்ட எம்.பி., கங்கனா ரணாவத், விமானம் மூலம் டில்லி சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !