தக் லைப் படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய ஜோஜு ஜார்ஜ்
ADDED : 479 days ago
தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்தவர் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ். இவர் தற்போது கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் தக் லைப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜோஜூ ஜார்ஜ் ஒரு சண்டைக் காட்சியில் நடித்தார். ஹெலிகாப்டரில் இருந்து அவர் குதிப்பது போன்று காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அதில் அவர் கால் தவறி விழுந்துள்ளார். இதில் காலில் பலத்த அடிபட்டுள்ளது. இதனால் தற்போது சிகிச்சை எடுத்து வருகிறார் ஜோஜூ ஜார்ஜ்.