இளையராஜாவிடம் ஆசி பெற்ற பிரேம்ஜி
ADDED : 477 days ago
45 வயது வரை சிங்கிளாகவே வாழ்ந்து வந்த நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி, கடந்த 9ம் தேதி இந்து என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் திருத்தணி முருகன் கோயிலில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரேம்ஜியின் பெரியப்பாவான இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொள்ளவில்லை. அன்றைய தினம் அவர் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றதால் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தனது மனைவி இந்து உடன் பிரேம்ஜி இளையராஜாவிடம் ஆசீர்வாதம் பெற்றதாக ஒரு புகைப்படம் உலா வருகிறது. ஆனால் இந்த சந்திப்பு திருமணத்திற்கு முன்பாக இருந்திருக்கும் என கூறப்படுகிறது.