சொன்ன தேதிக்கு முன்பே நாள் குறித்த தேவாரா படக்குழு
ADDED : 523 days ago
ஆர்ஆர்ஆர் படத்திற்கு பின் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் 'தேவாரா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜான்வி கபூர், சைப் அலி கான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
ஏற்கனவே தேவாரா படத்தை வருகின்ற அக்டோபர் 10ம் தேதி அன்று வெளியாகிறது என அறிவித்திருந்த நிலையில் தற்போது முன்னதாகவே வருகின்ற செப்டம்பர் 27ந் தேதி அன்று திரைக்கு வருவதாக இன்று அறிவித்துள்ளனர். ஜூலை மாதத்தில் இதன் முழு படப்பிடிப்பும் நிறைவு பெறும் என்கிறார்கள்.