சினிமாவை விட அரசியல் கஷ்டமானது : கங்கனா
ADDED : 478 days ago
பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் நடந்து முடிந்து லோக்சபா தேர்தலில் ஹிமாசல் பிரதேசம், மாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி., ஆகி உள்ளார். கோவை ஈஷா மையம் வந்த அவர் மூன்று நாட்கள் ஈஷா யோகா மையத்தில் தங்கியிருந்து ஆதியோகியை தரிசனம் செய்தார். பின்னர் நேற்று இரவு டில்லி புறப்பட்டு சென்றார்.
கங்கனா கூறுகையில், ‛‛எனது கேங்ஸ்டர் படம் வெளியானது முதல் என்னை அரசியலில் இணைய அணுகினார்கள். எனது குடும்பத்தில் உள்ள முன்னோர்கள் அரசியலில் இருந்துள்ளனர். அரசியல் வாழ்வில் மக்களுடன் என்னை தொடர்புப்படுத்தி கொண்டு தொடர்ந்து அதில் முன்னேறி செல்வேன். சினிமாவை விட அரசியல் எளிதானது அல்ல. படம் பார்க்க போனால் நிம்மதியாக இருப்பார்கள். ஆனால் அரசியல் அப்படியல்ல, பிரச்னைகள் உள்ளவர்கள் மட்டுமே அரசியல்வாதிகளை பார்க்க செல்வார்கள்'' என்கிறார்.