தர்ஷன் வழக்கு : போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் தடை உத்தரவு
கன்னட நடிகரான தர்ஷன், அவரது காதலியான பவித்ரா கவுடா உடன் சேர்ந்து ரேணுகா சுவாமி என்பவரைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் சேர்ந்து மேலும் சிலரும் இந்த வழக்கில் கைதாகி உள்ளார்கள். இந்த விவகாரம் கன்னடத் திரையுலகத்தில் மட்டுமல்லாது மற்ற திரையுலகத்திலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைதாகியுள்ள தர்ஷன் போலீஸ் விசாரணைக்காக அன்னபூர்னேஸ்வரி நகர் காவல்நிலையத்தில் உள்ளார். அங்கு வந்து தர்ஷனுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சிலர் திரண்டு வந்து கோஷம் போட்டுள்ளனர். அதனால், அந்த காவல் நிலையத்தை சுற்றி 200 மீட்டர் தொலைவுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதனிடையே ரேணுகா சுவாமி உடலை எடுத்துச் சென்றதாக கருதப்படும் வாகனங்கள் பற்றிய வீடியோவை சிசிடிவி மூலம் போலீசார் கைப்பற்றி உள்ளார்களாம். இந்த கொலை வழக்கில் பவித்ரா கவுடா நம்பர் 1 குற்றவாளியாகவும், தர்ஷன் நம்பர் 2 குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.