உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோட் படத்தில் ஏஐ தொழில் நுட்பத்தில் பவதாரணி

கோட் படத்தில் ஏஐ தொழில் நுட்பத்தில் பவதாரணி

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் கோட். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் நடிக்க வைத்துள்ளார்கள். விஜயகாந்த் ஒரு நிமிடம் படத்தில் வர உள்ளார். அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மறைந்த பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரணியையும் இப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஏஐ தொழில்நுட்பத்தில் பாட வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பவதாரணிக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் அந்த பாடல் கோட் படத்தில் இடம்பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !