உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரவீனாவுக்கு அடித்த ஜாக்பாட்

ரவீனாவுக்கு அடித்த ஜாக்பாட்

சின்னத்திரையில் ஒளிபரப்பான மெளன ராகம் சீசன் 2வில் ஹீரோயினாக அறிமுகமாகி புகழ் பெற்றவர் ரவீனா தாஹா. திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவருக்கு ஹீரோயின் அந்தஸ்தை மெளன ராகம் தொடர் தான் பெற்று தந்தது. அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கடுமையான டப் கொடுத்த ரவீனா தாஹா தற்போது பிசியாக திரைப்பட வாய்ப்புகளை தேடி வந்தார். இந்நிலையில், அவர் வேற மாறி ஆபிஸ் சீசன் 2 வில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகிவுள்ளார். முன்னதாக இந்த சீசனின் முதல்பாகம் ஓடிடி தளம் ஒன்றில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் அதிகம் புகழ் பெற்றது. இதனையடுத்து ரவீனாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் அவருக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !