உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எதிர்நீச்சல் குழுவினருக்கு நினைவுப்பரிசு கொடுத்த திருசெல்வம்

எதிர்நீச்சல் குழுவினருக்கு நினைவுப்பரிசு கொடுத்த திருசெல்வம்

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், நன்மதிப்பையும் பெற்ற எதிர்நீச்சல் தொடர் அண்மையில் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அதில் நடித்த நடிகர்கள் தங்கள் நினைவுகளை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், அந்த தொடரின் இயக்குநர் திருசெல்வம் தனது நடிகர்களுக்கு எதிர்நீச்சல் குழு சார்பாக அவர்கள் சீரியலில் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயரிலேயே நினைவு பரிசுகளை வழங்கியுள்ளார். கிட்டத்தட்ட ரீயூனியன் போல நடைபெற்ற இந்த நிகழ்வில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த அனைவருமே கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !