உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால்!

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால்!


நடிகர் விஷ்ணு விஷால் வித்தியாசமான கதையம்சங்களை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். தற்போது ராம்குமார் இயக்கத்தில் தனது 21வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

இந்த நிலையில் கனா, நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக இன்று அருண்ராஜா காமராஜ் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார். சமீபத்தில் அருண்ராஜா காமராஜ் இயக்கிய ‛லேபிள்' வெப்தொடர் வரவேற்பை பெற்றிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !