சிம்புவிற்கு பிறகு தான் எனக்கு : திருமணம் குறித்த கேள்விக்கு ரேமா பதில்
ADDED : 534 days ago
சின்னத்திரை நடிகை ரேமா அசோக் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தவிர நடன நிகழ்ச்சிகளில் தனது அதிரடியான நடனத்தால் பல ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பிசியாக இருக்கு ரேமா அசோக்கிடம் சிலர் எப்போது திருமணம் என்று கேட்க, 'அந்த கல்யாணம் மட்டும் லேட்டா யோசி நல்லா இருக்குமடா' என்று பதிவிட்டு சிம்புவின் திருமணத்திற்கு பிறகு தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.