உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கள்ளச்சாராய வியாபாரிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : கமல்

கள்ளச்சாராய வியாபாரிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : கமல்

தமிழகத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்ததில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல் வெளியிட்ட பதிவில், ‛‛கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர்(இப்போது 40) உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சை பெறுவோர் விரைவில் நலமடையை விழைகிறேன்.

தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். போதைக்கு எதிரானப் போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது''.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !