ராம், மிரிச்சி சிவா படத்தின் டப்பிங் பணி தொடங்கியது
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி போன்ற வித்தியாசமான படங்களைக் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தந்து வியக்க வைத்தவர் இயக்குனர் ராம். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ' ஏழு கடல் ஏழு மலை' படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.
இது அல்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் மிரிச்சி சிவாவை வைத்து ராம் புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். இப்படம் வெறும் 45 நாட்களில் படமாக்கியுள்ளனர். இதில் சிவா நடுத்தர வயது தந்தை கதாபாத்திரத்தில் வித்தியாசமாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது.
நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் இப்படத்தை ஓடிடி நிறுவனமே தயாரிக்கிறது. இப்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளதாக மிரிச்சி சிவா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.