சீமான், சிவகார்த்திகேயன் சந்திப்பு பின்னனி என்ன?
ADDED : 480 days ago
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியானது. நேற்றைய தினம் சீமான் உடன் சிவகார்த்திகேயன் உள்ள போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து பல கதைகள் இணையதள வாசிகளால் பின்னப்பட்டது.
நமக்கு கிடைத்த தகவலின்படி, சிவகார்த்திகேயன் 25வது படம் அரசியல் கதை களத்தை மையப்படுத்தி உருவாகிறதாம். இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சீமானை நடிக்க வைக்க தான் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்துள்ளார் என கூறப்படுகிறது.