உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'லியோ'வை விட குறைவான விலையில் 'தி கோட்' ?

'லியோ'வை விட குறைவான விலையில் 'தி கோட்' ?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தி கோட்' படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ டிவி நிறுவனம் பெற்றுவிட்டதாக படத் தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளின் உரிமையையும் அந்தடிவி வாங்கியுள்ளது.

ஆனால், விஜய் நடித்து இதற்கு முன்பு வெளியான 'லியோ' படத்தின் சாட்டிலைட் உரிமையுடன் ஒப்பிடும் போது இது குறைவு என தகவல் வெளியாகி உள்ளது. 'லியோ' படத்தின் சாட்டிலைட் உரிமை 80 கோடிக்கு விற்கப்பட்டது என்றார்கள். ஆனால், தற்போது 'தி கோட்' படத்தின் உரிமை 70 கோடிக்குத்தான் விற்கப்பட்டதாம்.

முதலில் இப்படத்தை வேறு ஒரு டிவி நிறுவனம்தான் பேசி வைத்திருந்ததாம். அதில் சில சிக்கல்கள் எழுந்ததால் அவர்களை விட்டுவிட்டு ஜீ டிவி நிறுவனத்திடம் பேசியிருக்கிறார்கள். பட வெளியீட்டிற்கு ஓரிரு மாதங்களே இருப்பதால் விலை குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

இருந்தாலும் சாட்டிலைட் உரிமையை விட ஓடிடி உரிமையை அதிக விலைக்குக் கொடுக்க வேண்டும் என திட்டமிட்டிருக்கிறார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !