மேலும் செய்திகள்
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
442 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
442 days ago
சென்னை : நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுவன் ஒருவனை சாகசம் செய்ய வைக்க நினைத்து அவர் கையில் தீ பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி, அரசியல் களத்தில் இறங்கி உள்ளார். 2026 சட்டசபை தேர்தலில் அவர் களம் காண உள்ளார். இன்று(ஜூன் 22) தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதையும் மீறி சிலர் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை, நீலாங்கரையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் சிறுவன் ஒருவன், நெருப்பில் எரியும் ஓடுகளை உடைக்கும் சாகசம் நடத்தப்பட்டது. அப்போது சிறுவன் கையில் பெட்ரோலை ஊற்றி நெருப்பை பற்ற வைத்தனர். ஓடுகளை உடைத்த பின்னரும் சிறுவன் கையில் பற்றிய தீ அணையாததால் அவர் வலியால் அலறி துடித்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் சிறுவனுக்கும், அவர் அருகில் இருந்த விஜய் கட்சியின் நிர்வாகி ஒருவருக்கும் லேசான தீ காயம் ஏற்பட்டது.
விஜய்யே பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று கூறிவிட்டார். ஆனால் அதை கேட்காத அவரது கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சாகசம் என்ற பெயரில் சிறுவன் கையில் நெருப்பை பற்ற வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளன.
442 days ago
442 days ago