உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித்தின் கார் ரேஸ் வீடியோ வைரல்

அஜித்தின் கார் ரேஸ் வீடியோ வைரல்

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று முதல் அஜர்பைஜானில் தொடங்கி இருக்கிறது. சுமார் ஒருமாத காலம் இந்த படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதற்காக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து அஜர்பைஜானுக்கு புறப்பட்டு சென்றார் அஜித். இன்று முதல் அங்கு ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் படமாகி வருகிறது.

இந்த நிலையில் இன்று விஜய்யின் கோட் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ள நிலையில், அஜித் ரசிகர்களையும் உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் தரப்பில் இருந்து அஜித்தின் கார் ரேஸ் வீடியோ ஒன்றை சோசியல் மீடியா வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !