ஜூலை 14ல் சென்னையில் இசை நிகழ்ச்சி : இளையராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADDED : 478 days ago
இசையமைப்பாளர் இளையராஜா படங்களுக்கு இசையமைப்பதை தவிர்த்து பல்வேறு ஊர்களில் இசை கச்சேரி நடத்தி வருகிறார். அந்தவகையில் வரும் ஜூலை 14ம் தேதி சென்னை, ஒய்எம்சிஏ மைதானத்தில் Truly live in concert என்ற இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த இசை நிகழ்ச்சி தொடர்பாக இளையராஜா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‛‛பேரன்பு கொண்ட ரசிக பெருமக்களே, வருகிற ஜூலை 14ம் தேதி சென்னையில் எனது இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. அந்த இசை நிகழ்ச்சியில் வெளிநாடுகளில் உள்ள தலை சிறந்த இசைக் கலைஞர்களும் எனது குழுவோடு இணைந்து நிகழ்ச்சியை நடத்த உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஜூலை 14ம் தேதி மறந்து விடாதீர்கள்'' என தெரிவித்துள்ளார்.