டி.என்.ஏ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!
ADDED : 552 days ago
நடிகர் அதர்வா தற்போது நிறங்கள் மூன்று, தணல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.
தற்போது ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன் இணைந்து 'டி. என். ஏ' என்கிற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். க்ரைம் ஆக்ஷன் டிராமா ஜானரில் உருவாகும் இப்படத்தை டாடா படத்தை தயாரித்த ஒலிம்பியா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
சமீபத்தில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது. தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது.