உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா 44 படத்தில் இணைந்த மலையாள நடிகர்!

சூர்யா 44 படத்தில் இணைந்த மலையாள நடிகர்!


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் நடித்து வருகின்றார். 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார்.

இதில் பூஜா ஹெக்டே, ஜெய்ராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது அந்தமானில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் புதிதாக மலையாள நடிகர் சுஜித் ஷங்கர் இணைந்துள்ளார். இப்போது இவர் படப்பிடிப்பில் நடித்து வருகின்றார் என்கிறார்கள். சமீபத்தில் வெளிவந்த ரசவாதி என்கிற படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !