மீண்டும் பான் இந்தியா படத்தில் நடிக்கும் சாய் துர்கா தேஜ்
ADDED : 492 days ago
விருபாக்ஷா மற்றும் 'ப்ரோ' ஆகிய படங்களை தொடர்ந்து சாய் துர்கா(தரம்) தேஜ் தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார். அறிமுக இயக்குநர் ரோஹித் இப்படத்தை இயக்குகிறார். பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர்கள் நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் தயாரிக்கின்றனர். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர்.
முதல் ஷெட்யூலுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில், தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தொழில்நுட்பகலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.