ரசிகர்களுடன் செல்பி எடுத்து சமாளித்த நாகார்ஜூனா
ADDED : 468 days ago
ஐதராபாத் விமான நிலையத்தில் முதியவர் ஒருவரை நடிகர் நாகார்ஜூனாவின் பவுன்சர் ஒருவர் தள்ளிவிட்டது சர்ச்சையானது. அதற்கு நடிகர் நாகார்ஜூனாவுக்கும் அவர் பின்னால் நடந்து வந்த நடிகர் தனுஷூக்கும் ரசிகர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
அதன்பிறகு சமூக வலைத்தளத்தில் அதற்கு பகிரங்கமான மன்னிப்பு கேட்டார் நாகார்ஜூனா. இந்நிலையில் நேற்று மாலை மும்பையில் உள்ள ஜுஹு கடற்கரையில் ரசிகர்களுடன் நாகார்ஜூனா செல்பி எடுத்தக் கொண்டார். அவரைப் பார்க்க ஓடி வந்த ரசிகர்களை அவர்களது பவுன்சர்கள் தள்ளிவிடாமல் இருந்தனர். சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்தபடி முந்தைய நாள் சர்ச்சையை சமாளித்தார்.
சமூக வலைத்தள கமெண்ட்டுகள் பிரபலங்களை உடனுக்குடன் சென்று சேர்ந்து அவர்களை திருத்திக் கொள்ளவும் வைக்கிறது. இனி பவுன்சர்களை பத்தடி தள்ளி நிற்கச் சொல்வார் நாகார்ஜூனா.