உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எம்புரான் படப்பிடிப்பில் உதவி இயக்குனருக்கு பிரித்விராஜ் கொடுத்த இன்ப அதிர்ச்சி

எம்புரான் படப்பிடிப்பில் உதவி இயக்குனருக்கு பிரித்விராஜ் கொடுத்த இன்ப அதிர்ச்சி

மலையாள நடிகர் பிரித்விராஜ் கிட்டத்தட்ட 100 படங்களை தாண்டி நடித்துவிட்டார். சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த லூசிபர் திரைப்படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் மாறினார். அதன்பிறகு மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்ற படத்தை இயக்கிய பிரித்விராஜ் தற்போது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்பிரான் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது குஜராத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் தனது உதவி இயக்குனர் ஒருவரின் பிறந்தநாளை படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார் பிரித்விராஜ். தன்னுடைய உதவியாளருக்கு பரிசு கொடுக்கும் விதமாகவும் அது இன்ப அதிர்ச்சியாக இருக்கும் விதமாகவும் கேக் வெட்டி அவருக்கு ஊட்டிய பிரித்விராஜ், தொடர்ந்து “போய் அடுத்த காட்சியை நீயே எடு மோனே” என்று உற்சாகப்படுத்தி அனுமதி கொடுத்திருக்கிறார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது பற்றி படக்குழுவினர் கூறும்போது இப்படி படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களது பிறந்த நாளை படப்பிடிப்பில் கொண்டாடும் போது அவர்களை ஒரு காட்சியை படமாக்க சொல்லி பிறந்தநாள் பரிசு கொடுப்பதை பிரித்விராஜ் வாடிக்கையாகவே வைத்துள்ளார் என்று கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !