வெங்கல் ராவ்விற்கு சிம்பு ரூ.2 லட்சம் நிதியுதவி
ADDED : 472 days ago
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் வெங்கல் ராவ். 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு படங்களில் சண்டை கலைஞராக பணியாற்றி வந்தார். பின்னர் காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கினார். தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்து அசத்தி உள்ளார். குறிப்பாக நடிகர் வடிவேலு உடன் இணைந்து 30 படங்களில் காமெடியில் அசத்தி உள்ளார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயலிழந்து மருத்துவ சிகிச்சைக்கே கஷ்டப்படுவதாகவும், நடிகர்கள், சங்கங்கள் உதவ வேண்டும் என வீடியோ வெளியிட்டு இருந்தார் வெங்கல் ராவ். இந்நிலையில் இவருக்கு முதல் ஆளாக நடிகர் சிம்பு உதவி புரிந்துள்ளார். அவருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். இவரைத் தொடர்ந்து இன்னும் பலர் உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.