ஆகஸ்டில் திரைக்கு வரும் பிரசாந்தின் 'அந்தகன்'
ADDED : 466 days ago
நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த், கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛அந்தகன்'. கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தை இரண்டு இயக்குனர்கள் இயக்கி கைவிட்ட நிலையில், இறுதியாக பிரசாந்தின் தந்தையான நடிகர் தியாகராஜனே படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் அனைத்து கட்ட பணிகளும் முடிவடைந்த பிறகும் திரைக்கு வராமல் இருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் மாதம் அந்தகன் படம் திரைக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளார்கள். மேலும் தற்போது விஜய் நடித்திருக்கும் கோட் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.