தமிழில் அறிமுகமாகும் ஹிர்தயம் பட இசையமைப்பாளர்!
ADDED : 483 days ago
மலையாளத்தில் ஹிர்தயம் என்கிற படம் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்றது. குறிப்பாக இதில் பாடல்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது. இதற்கு இசையமைத்தவர் ஏஷம் அப்துல் வாகப். இதையடுத்து தெலுங்கில் குஷி, ஹாய் நானா போன்ற படங்களின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் ஏஷம்.
இந்த நிலையில் மலையாளம், தெலுங்கு மொழி படங்களை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகிறார் ஏஷம் அப்துல் வாகப். அறிமுக இயக்குனர் விக்னேஷ் என்பவர் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏஷம் அப்துல் வாகப் இசையமைக்கின்றார். இதனை குட் நைட், லவ்வர் போன்ற படங்களைக் தயாரித்த மில்லியன் டாலர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.