ஹரிஷ் கல்யாண் பிறந்த நாளில் வெளியான புதிய பட அறிவிப்பு!
ADDED : 465 days ago
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த ஆண்டில் ஹரிஷ் கல்யாண் இந்துஜா ரவிச்சந்திரன், எம். எஸ். பாஸ்கர் நடிப்பில் வெளியான படம் ‛பார்க்கிங்'. கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான இந்த படம் 17 கோடி வரை வசூல் ஆனது. இந்த நிலையில் பார்க்கிங் படத்தை தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் மீண்டும் நடிக்க போகிறார் ஹரிஷ் கல்யாண். அவரது பிறந்தநாளை ஒட்டி நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தை அர்ஜுன் தாஸ் நடித்த அந்தகாரம் என்ற படத்தை இயக்கிய விக்னாராஜன் இயக்குகிறார். இந்த தகவலை ஒரு போஸ்டர் உடன் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.