சூர்யா நடிக்க இருந்த புறநானூறு படத்தில் தனுஷ் நடிக்கிறாரா?
ADDED : 479 days ago
சூரரைப்போற்று படத்தை அடுத்து மீண்டும் சூர்யா நடிப்பில் புறநானூறு என்ற படத்தை இயக்க திட்டமிட்டார் சுதா கொங்கரா. ஆனால் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த நேரத்தில் திடீரென்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கப் போவதாக அறிவித்தார் சூர்யா. இதன் காரணமாக புறநானூறு படத்தை கிடப்பில் போட்டுவிட்டு இன்னொரு கதையை துருவ் விக்ரமை வைத்து இயக்க சுதா கொங்கரா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தற்போது கிடப்பில் போட்டுள்ள புறநானூறு படத்தை தனுஷை வைத்து இயக்குவதற்கு சுதா கொங்கரா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், தற்போது தனுஷ் நடித்து வரும் ‛குபேரா' படத்தை அடுத்து அப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.