உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2025ம் ஆண்டில் துவங்கும் கைதி-2

2025ம் ஆண்டில் துவங்கும் கைதி-2


கடந்த 2019ம் ஆண்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த திரைப்படம் 'கைதி'. இப்படம் உலகளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. குறிப்பாக இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது நடைபெறும் என ரசிகர்கள் சில வருடங்களாக எதிர்பார்த்து வருகின்றனர்.

கைதி படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களில் பிஸியானதால் கைதி-2 தொடங்குவதில் தாமதம் ஆனது. தற்போது லோகேஷ் ரஜினியை வைத்து 'கூலி' எனும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை தொடர்ந்து 2025ம் ஆண்டு இரண்டாம் பகுதியில் கைதி 2ம் பாகம் துவங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !