3 நாளில் 415 கோடி வசூலித்த ‛கல்கி 2898 ஏடி'
ADDED : 462 days ago
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி ஆகியோரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛கல்கி 2898 ஏடி'. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த 27ம் தேதி வெளியான இந்த படம் முதல் நாளில் 191.5 கோடி வசூலித்த நிலையில், இரண்டாவது நாள் முடிவில் 295.5 கோடி வசூலித்திருந்தது. தற்போது 3 நாளில் 415 கோடி வசூலை பெற்றுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இன்று (ஜூன் 30) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் எளிதாக 600 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.