உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது

கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நித்தி அகர்வால் நடிப்பில் வெளியான படம் ‛ஈஸ்வரன்'. இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்தவர் சர்புதீன். இவர் சென்னையில் கஞ்சா விற்பனை செய்ததாக குற்றம்சாட்டு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது வீட்டில் நடக்கும் பார்ட்டிகளில் சினிமா பிரபலங்களுக்கு போதை தொடர்பான பொருட்கள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் வந்த புகாரின் அடிப்படையில் சென்னை, எல்டாமஸ் சாலையில் உள்ள சர்புதீன் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அவரது காரில் ரூ.27.5 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் சர்புதீனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !