தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம்
லிங்குசாமி இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், கார்த்தி, தமன்னா மற்றும் பலர் நடிப்பில் 2010ல் வெளியான படம் 'பையா'. அப்படம் தெலுங்கில் 'அவாரா' என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாகி அங்கும் வெற்றி பெற்றது.
15 வருடங்களுக்குப் பிறகு இப்படத்தை நாளை மீண்டும் ரீரிலீஸ் செய்ய உள்ளனர். இது குறித்து படத்தின் நாயகன் கார்த்தி, “அவாரா, எனக்கு எப்போதும் சிறப்பானது. அதன் சார்ட்-டாப்பிங் இசையும், அதற்குக் கிடைத்த அன்பும் இத்தனை ஆண்டுகளாக என்னுடன் இருந்து வந்துள்ளன. அதை மீண்டும் தியேட்டர்களில் பார்ப்பது நம் அனைவருக்கும் இனிமையான நினைவுகளைத் திரும்பக் கொண்டு வரும் என்று நம்புகிறேன். விநியோகஸ்தர்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றியும் சிறந்த வாழ்த்துக்களும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தம்பி கார்த்தி நடித்த 'பையா' படத்தைத் தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அண்ணன் சூர்யா நடித்த 'அஞ்சான்' படத்தை மீண்டும் எடிட் செய்து அடுத்த வாரம் நவம்பர் 28ம் தேதி ரிரிலீஸ் செய்ய உள்ளது.