பிக்பாஸ் ஜூலியின் பிறந்தநாள் கொண்டாட்டம்
ADDED : 464 days ago
சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் உச்சத்தை தொட்டவர் ஜூலி. தொடர்ந்து சீரியல், சினிமா என பிசியாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமிலும் அவ்வப்போது மாடலிங்கில் இறங்கி கலக்கி வருகிறார். தனக்கு கிடைத்த நெகட்டிவான இமேஜை பாசிட்டிவாக மாற்றி ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறிவிட்டார். பொது நிகழ்ச்சிகளிலும் ஜூலி கலந்து கொள்ளும் போது அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், அவர் அண்மையில் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஜூலி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.