நித்திலன் இயக்கத்தில் நயன்தாரா
ADDED : 543 days ago
‛குரங்கு பொம்மை' படம் மூலம் கவனிக்க வைத்தவர் இயக்குனர் நித்திலன் சாமிநாதன். சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து 'மகாராஜா' என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக மற்றும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் வசூலும் ரூ.80 கோடியை தாண்டி உள்ளது. ரூ.100 கோடி கிளப்பிலும் இணைய வாய்ப்பு உள்ளது.
மகாராஜா படத்தை தொடர்ந்து நித்திலன் அடுத்து நயன்தாரா உடன் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாக தெரிவிக்கின்றனர்.