ஷாருக்கானுக்கு சாதனையாளர் விருது : சுவிட்சர்லாந்தில் வழங்கப்படுகிறது
ADDED : 479 days ago
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் 77வது லேகார்னோ திரைப்பட விழா வருகிற ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி முதல் 17ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவரவிக்கப்பட இருப்பதாக விழா குழுவினர் அறிவித்துள்ளனர். இதில் ஷாருக்கான் நேரில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
58 வயதாகும் ஷாருக்கான் இந்தி பட உலகில் முன்னணி நடிகராக இருப்பதோடு தயாரிப்பாளராகவும், சமூக சேவகராகவும் இருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த பதான், ஜவான், டங்கி படங்கள் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. இப்போது அவரது மகன் மற்றும் மகளும் நடிக்க வந்திருக்கிறார்கள்.