சீரியல் நடிகையை காதலித்து கரம்பிடித்த வீஜே அஷ்வத்
ADDED : 469 days ago
பிரபல சின்னத்திரை நடிகையான கண்மணி மனோகரன், ‛பாரதி கண்ணம்மா, அமுதாவும் அன்னலெட்சுமியும்' ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். மாடலிங்கில் ஆரம்பித்து தற்போது நடிகையாக வளர்ந்துள்ள இவருக்கு தமிழ் சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கண்மணியின் நெக்ஸ்ட் ப்ராஜெக்ட் எப்போது என்று ஆவலாக கேட்ட ரசிகர்களுக்கு அவரது திருமண செய்தி திடீரென வெளியாகி இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கண்மணியும் வீஜேவாக புகழ்பெற்ற அஷ்வத்தும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களது திருமணத்திற்கு இருவீட்டார் தரப்பிலும் பச்சைக்கொடி காட்டிவிட்ட நிலையில் அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. நிச்சயதார்த்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வருகிறது.