கூலி படத்தில் இணைந்த விக்ரம் பட பிரபலம்
ADDED : 521 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் 'கூலி'. அனிரூத் இசையமைக்கும் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முடிந்துள்ளன. கூலி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வருகிற ஜூலை 5ம் தேதியான நாளை முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறது. 10 நாட்கள் நடக்கும் படப்பிடிப்புக்கு பின் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் இணைந்துள்ளார். இவர் பல மலையாள படங்களில் பணியாற்றி வந்தார். தமிழிலும் சர்கார் போன்ற படங்களில் பணியாற்றி உள்ளார். இதுதவிர லோகேஷ் இயக்கிய, கமலின் விக்ரம் படத்தில் இவர் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.