உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல் முறையாக யுவன் இசையில் பாடிய சந்தோஷ் நாராயணன்

முதல் முறையாக யுவன் இசையில் பாடிய சந்தோஷ் நாராயணன்

ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து பல மாதங்களை கடந்த நிலையில் வெளிநாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களுக்கு இந்த படத்தை அனுப்பி வைக்கப்படுகிறது.

சமீபத்தில் இதன் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியானதை தொடர்ந்து இப்போது இப்படத்திலிருந்து ' ஏழேழு மலை' என்கிற இரண்டாம் பாடல் வருகின்ற ஜூலை 5ம் தேதி அன்று வெளியாகிறது என அறிவித்துள்ளனர். மேலும், மதன் கார்க்கி எழுதியுள்ள இப்பாடலை முதன்முறையாக யுவன் இசையில் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !