மேலும் செய்திகள்
கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்'
452 days ago
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
452 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
452 days ago
தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி., ஜூன் 27ம் தேதியன்று வெளியான படம் 'கல்கி 2898 ஏடி'. இதில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி, பசுபதி, ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சயின்ஸ் பிக்சன் வித் பேண்டஸி ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரிலான இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத், ஸ்வப்னா தத், பிரியங்கா தத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்து வருகிறது. ஆயிரம் கோடியை தாண்டி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்றாலும் இந்த படம் தமிழத்தில் இதுவரை 28 கோடி மட்டுமே வசூலித்துள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது சூரி நடித்த 'கருடன்', விஜய்சேதுபதி நடித்த 'மகாராஜா' படங்களின் வசூலைவிட குறைவானதாகும். படத்தின் ஹீரோ பிரபாஸ், இந்த பாகத்தில் அதிக காட்சிகளில் நடித்திருப்பது அமிதாப்பச்சன் என்றாலும் தமிழ்நாட்டில் படத்தின் புரமோசன்களில் கமல்ஹாசன் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஆனால் அவர் ஒருசில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தார். இதனால் படம் தமிழகத்தில் பெரிய வரவேற்பை பெறவில்லை, என்கிறார்கள்.
452 days ago
452 days ago
452 days ago