மலராக என்ட்ரி கொடுத்த அஸ்வதிக்கு ரசிகர்கள் வரவேற்பு!
                                ADDED :  481 days ago     
                            
                             
‛மலர்' தொடரிலிருந்து ப்ரீத்தி சர்மா விலகுவதாக அண்மையில் அறிவித்தார். அதற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில், அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் கமிட்டாகியிருக்கிறார். இதற்கிடையில் விஜய் டிவியில் ‛மோதலும் காதலும்' சீரியலில் நடித்த அஸ்வதி, மலர் தொடரில் என்ட்ரி கொடுத்துள்ளார். முதல் எபிசோடிலேயே ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற அஸ்வதி, விக்ரம் வேதா தொடரில் தனக்கு கொடுத்த ஆதரவை போலவே மலர் தொடரிலும் ரசிகர்கள் தனக்கு ஆதரவு தர வேண்டுமென வேண்டுகோள் வைத்துள்ளார்.