மேலும் செய்திகள்
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
423 days ago
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
423 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
423 days ago
ஷங்கர், கமல்ஹாசன் என தமிழ்த் திரையுலகின் இரண்டு ஆளுமைகள் 28 வருடங்களுக்குப் பிறகு இணையும் படம் 'இந்தியன் 2'. இப்படத்திற்கு இசையமைக்கப் போகிறவர் அனிருத் என்றதுமே பலரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர். முதல் பாகத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து அதில் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானது.
அவர் இசையமைக்காமல் அனிருத்துக்கு வாய்ப்பு தருகிறார்களே என்ற குரலும் எழுந்தது. ரஹ்மான் மிகவும் பிஸியாக இருந்ததால்தான் அனிருத்துக்கு வாய்ப்பு தந்தேன் என ஷங்கரும் அதற்கு விளக்கமளித்தார்.
இதற்கு முன்பு தான் இசையமைத்த பெரிய படங்களுக்கு வெளியீட்டிற்கு சற்று முன்பாக அது குறித்து எமோஜிக்களுடன் டுவீட் போடுவது அனிருத் பழக்கம். அப்படித்தான் 'லியோ, ஜெயிலர், ஜவான்' ஆகிய படங்களுக்கு டுவீட் போட்டிருந்தார். ஆனால், 'இந்தியன் 2' படத்திற்கு இதுவரையில் எதையும் போடவில்லை.
என்ன அனிருத், இன்னும் பதிவு போடவில்லையா என ரசிகர்கள் பலரும் அவரைக் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
423 days ago
423 days ago
423 days ago