உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குஷ்பு, மீனாவுக்கு கிடைத்தது எனக்கு கிடைக்கவில்லை : அஞ்சு

குஷ்பு, மீனாவுக்கு கிடைத்தது எனக்கு கிடைக்கவில்லை : அஞ்சு

உதிரி பூக்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி அஞ்சு தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். எனினும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என கன்னட நடிகர் டைகர் பிரபாகரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சீரியல்களில் நடித்து வரும் அஞ்சு, சிங்கப்பெண்ணே என்ற தொடரில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், 'நான் குண்டாக இருந்ததால் எனக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மலையாளத்தில் என் நடிப்பை தான் பார்த்தார்கள். உடலை பார்க்கவில்லை. குஷ்புவும், மீனாவும் கூட குண்டாக தான் இருந்தார்கள். அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தது எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு மட்டும் வாய்ப்புகள் கிடைத்திருந்தால் நான் திருமணமே செய்திருக்கமாட்டேன்' என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !