விலங்கு வெப் தொடர் இயக்குனர் உடன் இணையும் சூரி
ADDED : 461 days ago
நகைச்சுவை நடிகர் சூரி விடுதலை படத்தின் வெற்றிக்குப் பிறகு கதையின் நாயகனாக படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் 'கருடன்' படத்தின் நடித்ததின் மூலம் கதாநாயகனாக அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார். இவரது நடிப்பில் அடுத்து கொட்டுக்காளி படம் வெளியாக உள்ளது. இதுதவிர விடுதலை 2 படமும் தயாராகி வருகிறது.
தற்போது கதைகளை கவனமாக கேட்டு படங்களை தேர்வு செய்கின்றார் சூரி. சமீபத்தில் தனது அடுத்த படத்திற்காக விலங்கு வெப் தொடர் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் உடன் சூரி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. தற்போது உள்ள நிலவரப்படி பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.