உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் ஹீரோவாக சிவராஜ் குமார் : பட தலைப்பு அறிவிப்பு

தமிழில் ஹீரோவாக சிவராஜ் குமார் : பட தலைப்பு அறிவிப்பு

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார். தமிழில் ரஜினி நடித்த ‛ஜெயிலர்' மற்றும் தனுஷ் நடித்த ‛கேப்டன் மில்லர்' படங்களில் நடித்தார். இப்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறார். இதை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஈட்டி, ஐங்கரன் ஆகிய படங்களை இயக்கிய ரவி அரசு இயக்குகிறார். இது சிவராஜ் குமாரின் 130வது படமாக உருவாகிறது

கன்னடம், தமிழ் என இரு மொழிகளில் உருவாகவுள்ள இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் சிவராஜ் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்திற்கு 'ஜாவா' என தலைப்பு வைத்துள்ளதாக டைட்டில் போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !